“திண்டுக்கல் வாசிக்கிறது” – கல்லூரியில் சிறப்பு விழிப்புணர்வு வாசிப்பு இயக்கம் கோலாகலம்!

15 Oct 2026

இடம்: கல்லூரி நூலகம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க, மாவட்டத்தில் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் நோக்கிலும், வரும் 22.10.2026 முதல் 01.11.2026 வரை நடைபெற உள்ள திண்டுக்கல் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டும் வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நூலகத்தில் 15.10.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 11:00 மணி முதல் 12:00 மணி வரை “திண்டுக்கல் வாசிக்கிறது” என்ற தலைப்பில் சிறப்பு விழிப்புணர்வு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

நிகழ்ச்சி விவரங்கள்:

  • ​தலைமை: கல்லூரி முதல்வர் முனைவர் எ. கற்பகம் அவர்கள் தலைமை தாங்கி, மாணவர்களிடையே வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
  • ​பங்கேற்பாளர்கள்: கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
  • ​நிகழ்வு: நிகழ்வின் போது அனைவரும் நூல்களை வாசித்து, புத்தக வாசிப்பின் அவசியத்தையும், வரவிருக்கும் திண்டுக்கல் புத்தகக் கண்காட்சியின் சிறப்பையும் வலியுறுத்தினர்.
  • மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்த இந்நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாகவும் சிறப்பாகவும் அமைந்தது.