POs & PSOs
PROGRAMME OUTCOME
இளங்கலை தமிழ் இலக்கியம் - BA TAMIL LITERATURE
- இளங்கலைதமிழ் இலக்கியப் படிப்பு பயில் வோரை, தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை மிக்கவர்களாகப் பயிற்றுவித்து, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது
- இலக்கண இலக்கியங்களின் நுட்பங்களை அறிந்து, அவை சமூக வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் மாணவிகளை உருவாக்குவது.
- கவிதை, சிறுகதை போன்ற இலக்கிய வடிவங்களினூடே படைப்பளர்கள் வெளிப்படுத்திய சமூக விழுமியப் பதிவுகளை எடுத்தியம்பி, மேம்பாடுடைய சமூகத்தை அனைத்துத் தளத்திலும் ஏற்படுத்த மாணவிகளை வழிப்படுத்துவது.
- பிறதுறை மாணவர்களைப் போல வளாகத் தேர்வில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறச்செய்தல்
PROGRAMME SPECIFIC OUTCOME
இளங்கலை தமிழ் இலக்கியம் - BA TAMIL LITERATURE
| PSO1: | தமிழர்களின் வாழ்வில் சமயம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது மக்களிடையே அன்பையும் பண்பையும் தன்னம்பிக்கையையும் வளர்ப்பதில் சமயங்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும் சமயங்களின் கொள்கைகளைக் கூறுவன சமய இலக்கியங்களாகும் மாணவிகளுக்கு அக்கொள்கைகளை அறிமுகப்படுத்துவது இப்பாடத்தின் குறிக்கோளாகும். |
| PSO2: | அறிவியல் தமிழாக்கத்தின் அவசியத்தையும் அதனால் சமகால சமூக அமைப்பின் அனைத்துத் தரப்பு மக்களும் நுகளும் பயன்பாட்டையும் எடுத்தியம்புதல். |
| PSO3: | இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கு இலக்கியச் சிந்தனையை வளர்க்கும் நோக்கில் இப்பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது காப்பியம் புராணம் இலக்கணம் மற்றும் புதினம் எழுதுவதற்கு மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இப்பாடத்திட்டம் உள்ளது. |
