சர்வதேச யோகா தின விழா - 2026

22 Jun 2026

கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம்: மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

21.06.2026, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தில் மாணவிகளின் சிறப்பு யோகாசன நிகழ்ச்சி  (22.06.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் Dr. K. M. சுமதி அவர்கள் தலைமை தாங்கி, நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அவர் தனது தலைமையுரையில், "மாணவிகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு யோகாசனம் எவ்வளவு இன்றியமையாதது" என்பதைப் பற்றியும், அன்றாட வாழ்க்கையில் யோகாவை ஒரு பழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து, கல்லூரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து, உடலை வளைத்து பல்வேறு வகையான ஆசனங்களைச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும், உடற்கல்வி இயக்குனர் (Director of Physical Education) மற்றும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் Dr. J. மருதுபாண்டி அவர்கள் முன்னின்று சிறப்பாகச் செய்திருந்தார். விழாவின் நிறைவில், பங்கேற்ற மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.