எரியோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தீவிர எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் 21.09.2026, திங்கள் கிழமை அன்று நடைபெற்றது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் எ. கற்பகம் அவர்கள் தலைமை தாங்கினார். எரியோடு நம்பிக்கை மைய ஆற்றுநர் விஜய சாரதி சிறப்புரையாற்றி, எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் அவசியம் குறித்தும், எச்.ஐ.வி./எய்ட்ஸ் நோய் தடுப்பு முறைகள் குறித்தும் மாணவ, மாணவிகளிடையே விரிவாக எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து, கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு சின்னமான செஞ்சுருள் (Red Ribbon) வடிவிலும், மாணவர்கள் மனித சங்கிலியாகவும் அணிவகுத்து நின்று எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட (NSS) அலுவலர் முனைவர் அ. கார்த்திகேயன் செய்திருந்தார். நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியர்கள், ஆய்வக நுட்பநர் பரமேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
|











