ஒரு உறுதிமொழி .. ஒரே இலக்கு.. போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு
11 Aug 2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் நடைபெறும் மாநிலம் தழுவிய போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி நிகழ்வு!
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு
DRUG FREE TAMILNADU
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேடசந்தூர்
உறுதிமொழி ஏற்பு நிகழ்வு
நமது கல்லூரியின் முதல்வர் முனைவர் க. மா. சுமதி அவர்கள் தலைமையில், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி
"போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.
போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்."
![]() |
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
-Back













