முதலாமாண்டு மாணவர்கள் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி – ஐந்தாம் நாள் நிகழ்வு

07 Jul 2026

5-ஆம் நாள் புத்தாக்கப் பயிற்சியில், மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு வசதிகள், அரசுப் பணி மற்றும் சுயதொழில் குறித்து மாணவர்கள் எவ்வாறு தங்களைத் தயார்ப்படுத்த வேண்டும் என்பது பற்றிய தகவல்களைப் பேரா. முனைவர். இளஞ்செழியன் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட மையக் கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் திரு. பாலசுப்பிரமணியன் அவர்கள், வங்கிக் கணக்குத் தொடங்குதல் மற்றும் பணப்பரிவர்த்தனை முறைகள் குறித்துப் பேசினார்.
 
கூட்டுறவு வங்கியின் தகவல் தொடர்பு மேலாளர், பணப்பரிவர்த்தனையில் ஏற்படும் சைபர் குற்றங்கள் குறித்த தகவல்களை வழங்கினார். இணையதள மோசடிகளை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும் அதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் அவர் பேசினார்.
 
வேடசந்தூர் கூட்டுறவு வங்கியின் மேலாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள், மாணவர்களின் எதிர்காலத் திட்டமிடல் குறித்துப் பேசினார்.
 
கல்லூரியின் முன்னாள் மாணவரும் தமிழ்த்துறையைச் சார்ந்தவருமான அருண்குமார் (தமிழ்நாடு மின்வாரியம்) மற்றும் ஆங்கிலத்துறையின் முன்னாள் மாணவர் S. சரத்குமார் (வேளாண்மைத் தொழில்) ஆகியோர் மாணவர்களின் எதிர்காலத் திட்டமிடல் குறித்துப் பேசினர்.
 
கணிதத்துறைப் பேராசிரியர் முனைவர். ஆ. செபஸ்தியான் செல்வராஜ் அவர்கள், கல்லூரியின் நாள்காட்டி மற்றும் ஆண்டுவிழா மலர் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டு உரையாற்றினார்.
 
கல்லூரி முதல்வர் முனைவர். க. மா. சுமதி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இப்பயிற்சிப் பட்டறைக்கு ஆங்கிலத்துறைத் தலைவர் பேரா. ச. முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.  நாள் நிகழ்வுகளை தொகுத்து வழங்கி, விழாவின் நிறைவாக முனைவர்.  அவர்கள் நன்றியுரை வழங்க, நான்காம் நாள் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
 
பிற்பகல் வேளையில், தொழில் முனைவு குறித்தும் தொழில் தொடங்கும் வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பினாயில் தயாரித்தல், சோப்புத் தூள் தயாரிப்பு மற்றும் சோப்பு ஆயில் தயாரிப்பு குறித்த செயல்முறைப் பயிற்சியையும் விளக்கத்தையும் வணிகவியல் துறைப் பேராசிரியர் Dr. G. தங்கமணி அவர்கள் நிகழ்த்திக் காண்பித்தார்.
 
ஐந்தாம் நாள் நிகழ்வுகளை தொகுத்து வழங்கி, விழாவின் நிறைவாக தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர்.  எம். முத்து வைரம் அவர்கள் நன்றியுரை வழங்க,  ஐந்தாம் நாள்  ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.