போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி 2026 | கல்லூரி மாணவர்கள் பெருமிதம்!

25 Jun 2026

போதைப் பொருள்கள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாள் (ஜூன் 26, 2026).

போதைப் பழக்கமில்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்!

போதைப் பொருள்கள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாளை முன்னிட்டு, 25.06.2026 (வியாழக்கிழமை) அன்று, காலை 11.00 மணி அளவில் நமது கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் அரங்கில் "போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு" நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நமது கல்லூரியின் அனைத்துத்துறை சார்ந்த இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகள் அனைவரும் இந்நிகழ்வில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டார்கள். 

போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி:

போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.

போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்."

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்:

முனைவர். இரா. சுந்தரராஜ், 
கௌரவ விரிவுரையாளர், ஆங்கிலத்துறை.
முனைவர். ஜெ. மருதுபாண்டி,
உடற்கல்வி இயக்குனர்.
நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் என்றும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்!